62, 2nd Floor, 3rd St
Abiramapuram, Chennai - 600 018.

Other Genres

அழகிய கருப்பன் ஒருத்தன் இருந்தான்.
அழகிய சிகப்பி ஒருத்தி இருந்தால்.
கருப்பன் விட்ட காதல் அம்பில், காதல் வசப்பட்டாள் சிகப்பி.
காதல் மலர்ந்தது, கல்யாணம் முடிந்தது.
அந்தக் காதலுக்குப் பரிசாகக் கிடைத்தது இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை. 

தன் பிள்ளைகளுக்குச் சொத்துகளைச்(Assets) சேர்க்க நினைத்தான் கருப்பன்.
அது பணம்(Money), பொன்(Gold), மற்றும், ஸ்டாக்ஸ் (stocks) என்று அவன் நினைத்தான் . 

ஆதலால்,
மரங்களை வெட்டினான், பணமாக்கினான்(Money).
மலைகளை உடைத்தான், பொன்னாக்கினான்(Gold)
நீர்நிலைகளை அழித்தான், ஸ்டாக் (stocks) ஆக மாற்றினான் கருப்பன். 

தன் பிள்ளைகளுக்காகச் சேர்த்தது, தேவையைத் தாண்டி மிச்சமாய் இருந்தது என்று எண்ணி.
மகிழ்ந்தான், மகிழ்ந்தான்…மறைந்தான். 

வருடங்கள் போயின.
கருப்பன் தன் பிள்ளைகளுக்காக சேர்த்த சொத்துக்கள்,
பணம்(Money), பொன்(Gold), மற்றும், ஸ்டாக்ஸ் (stocks)
அது மூன்றும், மூன்றாம் தலைமுறையோடு கரைந்து போக. 

தன் 100-வது தலைமுறை கஷ்டப்படுவதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் கருப்பன். 

ஏனெனில், 

அங்கே மழை இல்லை, ஏனெனில் மரம் இல்லை.
அங்கே மழை இல்லை, ஏனெனில் மலைகள் இல்லை.
அங்கே நீர் இல்லை, ஏனெனில் குளம் இல்லை, குட்டை இல்லை, ஏரி இல்லை. 

கருப்பனுக்கு புரிந்தது
தன் பிள்ளைகளுக்கு கொடுத்து இருக்க வேண்டிய சொத்து(Assets) எது என்று. 

அது மரம், மலை, நீர், மண்,  சிறந்த இயற்கை என்று.
அதை சொல்ல நினைக்கிறான்  ஆனால்… 

Summary:

 

This Tamil poem narrates a poignant tale about a man named Karuppan and the choices he made for his children, only to realize the profound consequences later.  

Karuppan fell in love with a beautiful woman named Sigappi. Their love blossomed, and they married, blessed with three children – two boys and a girl. Driven by the desire to secure their future, Karuppan focused on accumulating wealth in the form of money, gold, and stocks. 

To achieve this, he cut trees for money, broke mountains for gold and, destroyed water bodies for stocks. 

Karuppan believed he had provided beyond necessity and passed away with content. However, generations later, the very wealth Karuppan amassed vanished, leaving his descendants in dire suffering. 

From the skies, Karuppan witnessed the plight of his 100th generation, who lived without rain, trees, mountains, or water. Only then did realize the true legacy he should have left behind: nature itself – trees, rain, water, and fertile soil. 

The poem ends with Karuppan wanting to convey this truth but being unable to leave a powerful message about the importance of preserving nature for future generations.

Storyteller

Muthu Velanganni

I craft the realities of life into poetic expressions, turning everyday moments into vivid stories that resonate with the heart and soul.

My Kathai